திருநிழல் தாங்கல்

நிழல் தாங்கல், அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுக்கு அகிலத்திரட்டு அம்மானையில் கொடுக்கப்பட்டுள்ள பெயராகும். இவை பதிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்டவைகளாகும். அய்யாவழியின் வழிபாட்டு தலங்களுள் அய்யா வைகுண்டரின் அவதார இகனைகளுடன் நேரடித் தொடர்பு இல்லாதவைகளெல்லாம் தாங்கல்கள் என்றே அகிலத்தில் குறிப்பிடப்படுகிறது.

இவை பதிகளை விட அளவில் சிறியவை. மேலும், இங்கு எந்த வித சிலைகளும் இருக்காது. ‌இவை மிகத் தூய்மையுடன் பேணப்படுகின்றன.

1996- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி தென்னிந்திய முழுவதுமாக 7000 தாங்கல்கள் இருப்பதாக கணக்கிடப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் தென் மாவட்டங்களில் இவை அதிகமாக காணப்படுகின்றன.

2018களில் நிழல் தாங்கல் என்ற பெயர்கள் சில அறிவற்றவர்களால் திருக்கோயில் என ஆங்காங்கே மாற்றப்பட்டுள்ளது. அகிலத்திரட்டு அம்மானையில் தெளிவாக உள்ளது,அய்யாவின் நேரடி இகனைகளுடன் தொடர்புடையவைகள் பதிகள் எனவும், மற்ற அய்யா வழிபாட்டு தலங்கள் நிழல் தாங்கல் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை விடுத்து திருக்கோயில் என பெயர் மாற்றுவது அய்யாவழிக்கு உகந்தது இல்லை. திருக்கோயிலுக்கு உள்ளே செல்லவிடாமல் இருந்ததால் தானே இந்த வழிபாட்டு உரிமையை அய்யா நமக்கு தந்தார். நம் கையை வைத்து நம் கண்ணை ஏன் குத்தவேண்டும்.விழிப்புடன் இருப்போம்.தீயவர்களிடம் விலகி இருப்போம். அய்யா நமக்கு அருளிய பதிகளிலும் நிழல் தாங்கல்களிலும் வழிபட்டு,அய்யாவின் அருள் பெறுவோம்.அய்யா உண்டு

இதில் ,அமராவதிவிளை நிழல் தாங்கல் மாதம் தோறும் முதல் கிழமை தோறும் அன்னதானமும் வருடத்தில் பத்து நாள் திருவிழாவும் அன்னதானமும் கொண்டாடப்படுகிறது.

CONTACT
close slider

    Please feel free to get in touch, we value your feedback.